தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹாரர் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
தற்போது, அருள்நிதி – அஜய் ஞானமுத்து கூட்டணியில் இப்படத்தின் பார்ட் 2 உருவாகி வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இதற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, இப்படத்தை வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.