தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹாரர் படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
தற்போது, அருள்நிதி – அஜய் ஞானமுத்து கூட்டணியில் இப்படத்தின் பார்ட் 2 உருவாகி வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இதற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், இதன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இன்று இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.