ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • June 2, 2023 / 11:02 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ கடந்த மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சை.கெளதமராஜ் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus