மனைவியை நினைத்து கண்கலங்கிய அருண் ராஜா காமராஜ் !

தமிழ் சினிமாவில் “கனா ” என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் ராஜா காமராஜ் .
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து இருந்தார் . சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருந்தார் .இந்த படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கும் அடுத்து படத்தின் அறிவிப்பு வந்தது .

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்று தலைப்பில் படம் அந்த படம் உருவாகி உள்ளது .அந்த படம் ஹிந்தி மொழியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த தருணத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து கொரோனவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் . இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் படத்தின் டைரக்டர் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்து பற்றி பேசினார். அப்போது மேடையிலேயே கண்கலங்கி அழுதார் அருண்ராஜா காமராஜ்.

தொடர்ந்து பேசிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . மேடையில் கண்கலங்கிய அருண் ராஜா காமராஜாவால் பேச முடியவில்லை அதனால் நன்றி கூறிவிட்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்.

Share.