அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘யானை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 1, 2022 / 11:43 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர், யானை’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘யானை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று (ஜூலை 1-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus