Mission Chapter 1 : அருண் விஜய் – எமி ஜாக்சன் நடித்துள்ள ‘மிஷன் சேப்டர் 1’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்! Url : arun vijay’s mission chapter 1 movie review

  • January 12, 2024 / 06:13 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான், மிஷன் சேப்டர் 1’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘மிஷன் சேப்டர் 1’ படம் இன்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus