அறிவழகன் இயக்கும் ‘AV 31’… சூப்பரான அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிவழகன் இயக்கும் படத்துக்கு ‘பார்டர்’ என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதில் ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறாராம். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு நடிகர் அருண் விஜய் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை நடிகர் அருண் விஜய்யே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட சில ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார். அருண் விஜய்யின் 31-வது படமான இதனை இந்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.