அருண் விஜய்யின் 31-வது படம்… ஃபைனல் ஷெடியூலுக்கு நாள் குறித்த படக்குழு!
November 19, 2020 / 06:38 PM IST
|Follow Us
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.
ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் அறிவழகன் இயக்கும் படத்துக்கு ‘ஜிந்தாபாத்’ என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று அருண் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் ஸ்டில்லை வெளியிட்டதுடன், படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறாராம்.
With overwhelming Joy, On the Occasion of Our Hero @arunvijayno1’s b’day We are Happy to share that final schedule of #AV31 shoot Will resume frm November last week.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.