Mission Chapter 1 : 4 நாட்களில் அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 16, 2024 / 08:00 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான், மிஷன் சேப்டர் 1’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘மிஷன் சேப்டர் 1’ படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.8.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus