Mission Chapter 1 : அருண் விஜய் – எமி ஜாக்சன் நடித்துள்ள ‘மிஷன் சேப்டர் 1’… வெளியானது ட்ரெய்லர்!

  • January 6, 2024 / 10:40 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இப்போது இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான், மிஷன் சேப்டர் 1’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘மிஷன் சேப்டர் 1’ படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன், பேபி இயல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus