நம்ம அருண் விஜய்யா இது… செம ஸ்டைலிஷ் லுக்கில் புதிய போட்டோஷூட்!
September 30, 2020 / 01:00 PM IST
|Follow Us
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.
ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது.
இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், ஜிந்தாபாத்’ மற்றும் இயக்குநர் மிஷ்கின் – ஹரி படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். அருண் விஜய் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இந்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோ ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது. இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட ப்ளான் போட்டுள்ளார் அருண் விஜய்.
Here’s a glimpse of my new photoshoot to be out on Oct 2nd 11am!!