பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.
ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், ஜிந்தாபாத்’ மற்றும் இயக்குநர் மிஷ்கின் – ஹரி படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ஹரி இயக்கும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்கலாம் என இயக்குநர் ஹரி ப்ளான் போட்டுள்ளார். தற்போது, இப்படத்தின் பட்ஜெட் ரூ.17 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும், படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது ‘ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் அஜித்தின் ‘ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம்’ ஆகிய படங்களை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.