அடேங்கப்பா… ஒரே வாரத்தில் அருண் விஜய்யின் ‘சினம்’ செய்த வசூல் இவ்ளோவா?

  • September 23, 2022 / 05:32 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சினம்’ படம் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் GNR.குமாரவேலன் இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறார்.

அருண் விஜய்-க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.3.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus