அருண் விஜய்யின் ‘சினம்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • September 17, 2022 / 05:16 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சினம்’ படம் நேற்று (செப்டம்பர் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் GNR.குமாரவேலன் இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறார்.

அருண் விஜய்-க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.90 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus