அருண் விஜய்யின் ‘சினம்’… வெளியானது ‘என்னில் பாய்ந்திடும் காதலே’ பாடல்!

  • January 27, 2021 / 11:34 AM IST

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.

ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் GNR.குமாரவேலன் இயக்கும் ‘சினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை சமீபத்தில் ரிலீஸ் செய்தனர். இந்த படத்தில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம். இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்துள்ளனர். தற்போது, படத்தின் ‘என்னில் பாய்ந்திடும் காதலே’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். ஷபிர் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus