அருண் விஜய் போலீஸாக நடித்துள்ள ‘சினம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 17, 2022 / 02:29 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சினம்’ படம் இன்று (செப்டம்பர் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் GNR.குமாரவேலன் இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறார்.

அருண் விஜய்-க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus