பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான். ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், ஜிந்தாபாத்’ மற்றும் இயக்குநர் மிஷ்கின் – ஹரி படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் GNR.குமாரவேலன் இயக்கும் ‘சினம்’ படத்தில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
இவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம். தற்போது, இப்படம் OTT-யில் வெளியாகுமா? என்று இயக்குநர் GNR.குமாரவேலனிடம் கேட்கையில் “படத்துக்கான டப்பிங் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் பின்னணி இசையமைக்கும் பணியை துவங்க உள்ளோம். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதனை நாங்கள் OTT-யில் ரிலீஸ் செய்யப்போவதில்லை. இப்படம் ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.