பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் அருண் விஜய்… ரிலீஸானது ‘சினம்’ செகண்ட் லுக்!

  • August 15, 2020 / 06:36 AM IST

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.

ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், ஜிந்தாபாத்’ மற்றும் இயக்குநர் மிஷ்கின் – ஹரி படங்கள் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் GNR.குமாரவேலன் இயக்கும் ‘சினம்’ படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் செகண்ட் லுக் போஸ்டரை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus