சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
இப்போது சிலம்பரசன் ‘பத்து தல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், சிலம்பரசன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2012-யில் ரிலீஸான தமிழ் படம் ‘வேட்டை’.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் ஆர்யா – மாதவன் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், ஆர்யா ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் லிங்குசாமியின் முதல் சாய்ஸாக இருந்தது சிலம்பரசன் தானாம். பின், சில காரணங்களால் சிலம்பரசனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.