2005 ஆம் ஆண்டு வெளிவந்த “அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் ஆர்யா ஒரு ஃபிட்னஸ் ஃபிரீக்.
உள்ளம் கேட்குமே, கலாபக்காதலன், பட்டியல், ஓரம்போ, நான் கடவுள், சர்வம், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ராஜா ராணி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.
நடிகர் ஆர்யா உடல் எடையை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் மிகவும் கவனமாக இருப்பார். இவரை திரைத்துறையில் இருக்கும் அனைவருமே ஃபிட்னஸ் ஃபிரீக் என்று அழைப்பார்கள்.
தற்போது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமாருடன் சைக்கிளிங் சென்று புதிய சாதனை படைத்ததை பதிவிட்டுள்ளார்.
இன்று நடிகர் ஆர்யா 3 மணி 27 நிமிடம் 55 நொடிக்குள் 100.32கிமி தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார். இவருடன் இயக்குனர் சந்தோஷும் இந்த சைக்கிளிங்கில் கலந்துகொண்டுள்ளார்.
https://twitter.com/arya_offl/status/1284335507795660800?s=19
நடிகர் ஆர்யா சர்வதேச சைக்கிளிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யா சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் “டெடி” என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது, விரைவில் இந்த படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.