ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 15, 2023 / 09:18 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடியிருந்தார்.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சந்தானம், சுப்பு பஞ்சு, சித்ரா லக்ஷ்மணன், அஷ்வின் ராஜா, விஜயலக்ஷ்மி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் ரூ.30 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus