10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • June 12, 2023 / 11:55 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் கடந்த ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரபு, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.7.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus