பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான பா ரஞ்சித், தனது முதல் படமான அட்டகத்தி மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா படத்தை இயக்கியது வரை தமிழ் திரைப்படவுலகில் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறார்.
இவர் தற்போது ‘ சல்பேட்ட’ என்னும் படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருகிறார். இந்த படம் வடசென்னையில் 80 களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஆர்யாவுடன் கலையரசனும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்துள்ளார் என்றும், ‘போதை ஏறி புத்தி மாறி ‘ படத்தில் நடித்த தசரா விஜயன் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த “கதைதிரைக்கதைவசனம்” திரைப்படத்தில் நடித்த சந்தோஷ்பிரதாப் , இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது பேட்ட படத்தில் நடித்திருந்த சபீர் இணைந்துள்ளதாக, அவர் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருக்கிறார் நடிகர் ஆர்யா.
இவர் இந்தப் படம் மட்டுமன்றி ஆர்யாவின் டெடி படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சபீர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயார் பா.ரஞ்சித் என்று கூறியிருக்கிறார்.
https://twitter.com/arya_offl/status/1313314498665611269?s=19
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.