ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 22, 2021 / 11:25 AM IST

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

தற்போது, பா.இரஞ்சித் இயக்கியுள்ள புதிய படமான ‘சார்பட்டா பரம்பரை’ தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இன்று (ஜூலை 22-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகியுள்ளது. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குத்துச் சண்டை வீரராக ஆர்யா வலம் வரும் இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்போது, இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus