மார்ச் 12-ஆம் தேதி OTT-யில் ‘டெடி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ஸ்னீக் பீக்!

  • March 10, 2021 / 05:44 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டெடி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ஆர்யா அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் சூப்பரான ஸ்னீக் பீக்கை இன்று (மார்ச் 10-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஸ்னீக் பீக் வீடியோ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. ஏற்கெனவே, ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus