தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் தமிழில் நடித்த முதல் படம் ‘சூது கவ்வும்’. இதில் ‘கேசவன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
அதன் பிறகு ‘பீட்சா 2: வில்லா’வில் ஹீரோ அவதாரம் எடுத்தார் அசோக் செல்வன். இந்த படத்துக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தெகிடி, சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அசோக் செல்வன் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான தமிழ் படம் ‘போர் தொழில்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், அசோக் செல்வன் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாக தகவல் வந்தது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது, அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.