அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?
June 14, 2023 / 11:45 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘போர் தொழில்’. இப்படம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக நிகிலா விமல் நடித்துள்ளார். இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘APPLAUSE எண்டர்டெயின்மெண்ட் – E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – EPRIUS ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.9.62 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus