சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • August 1, 2023 / 02:10 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘போர் தொழில்’. இப்படம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக நிகிலா விமல் நடித்துள்ளார். இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘APPLAUSE எண்டர்டெயின்மெண்ட் – E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் – EPRIUS ஸ்டுடியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus