Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

  • February 20, 2024 / 08:49 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ள புதிய படம் ‘ப்ளூ ஸ்டார்’ (Blue Star). இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வன் – ஷாந்தனு பாக்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி பாண்டியன், ப்ரித்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus