அசோக் செல்வன் நடிப்பில் திரில்லர் படம் !

  • June 10, 2022 / 12:54 PM IST

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் திரைப்படம் ‘வேழம்’ . இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்து உள்ளனர்.மேலும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதி செய்துள்ளார். ஏ.கே.பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளனர்.

வருகிற ஜூன் 24-ந் தேதி வேழம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். சுவாரஸ்யமான கொலை மர்ம திரில்லராக வேழம் படம் உருவாகியுள்ளது.

அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை படம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இவர் நடிப்பில் ஹாஸ்டல் படம் வெளியானது . அந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. திரில்லராக வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus