Saba Nayagan : அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • February 5, 2024 / 03:18 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் நடித்த ‘சபா நாயகன்’ படம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி என மூன்று ஹீரோயின்ஸாம்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெயசீலன் சிவராம், ஸ்ரீராம் க்ரிஷ், ஷெர்லின் சேத், விவியாசந்த், அக்ஷயா ஹரிஹரன், துளசி ஷிவமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார், பாலசுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்தனர், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.19.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

\

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus