ரொமான்டிக் காமெடி படமான ‘தீனி’… சூப்பரான ட்ரெய்லரை வெளியிட்ட 3 பிரபலங்கள்!

  • February 5, 2021 / 02:52 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் தயாராகியுள்ள புதிய படம் ‘தீனி’. இந்த படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, நித்யா மேனன் என டபுள் ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் நாசர், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா LLP’ என்ற நிறுவனம் சார்பில் BVSN.பிரசாத் தயாரித்துள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.

ரொமான்டிக் காமெடி படமான இதன் ட்ரெய்லரை இன்று (பிப்ரவரி 5-ஆம் தேதி) நடிகர்கள் தனுஷ், மோகன் லால், சாய் தரம் தேஜ் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி பிரத்யேகமாக பணம் செலுத்தி படம் பார்க்கும் OTT தளமான ‘ஜீ ப்ளெக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus