அஷ்வின் குமார் – கோவை சரளா நடித்துள்ள ‘செம்பி’… 10 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

  • January 9, 2023 / 07:10 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘செம்பி’. இந்த படம் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார், கோவை சரளா, தம்பி இராமையா ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இந்த படம் ரூ.3.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus