பிரபல ஹீரோவின் பொலிட்டிக்கல் த்ரில்லர் படம்… உதவி இயக்குநர்களை புலம்பவிட்ட இயக்குநர்!

தமிழ் சினிமாவில் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் அந்த இயக்குநர். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தார். ஆனால், இவரின் நடிப்புக்கு லைக்ஸ் போடும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்து கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினார்.

அப்படம் சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து அதே கேங் நடிகர்களுடன் சில படங்களை இயக்கினார். பின், டாப் ஹீரோ ஒருவரை நெகட்டிவ் ஷேடில் வலம் வரவைத்து ஒரு சூப்பரான படத்தை இயக்கினார். அதன் பிறகு இரண்டு படங்கள் சரியாக போகவில்லை, மீண்டும் கிரிக்கெட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து ஹிட் கொடுத்தார்.

இவர் இயக்கிய ஒரு படம் பல வருடங்களாக ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது. சமீபத்தில், பிரபல நடிகையை வைத்து OTT-க்காக இயக்கிய ஹாரர் வெப் சீரிஸ் சுமாராகத் தான் இருந்தது. இப்போது, விரல் வித்தை நடிகரை வைத்து ஒரு அரசியல் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி கொண்டிருக்கிறார் அந்த இயக்குநர். இந்நிலையில், இந்த இயக்குநருடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு அவர் சம்பளமே கொடுக்காமல் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் உதவி இயக்குநர்கள் புலம்பி வருகிறார்களாம்.

Share.