“800” திரைப்படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டேன்-அசுரன் நடிகர்!

  • October 15, 2020 / 10:03 PM IST

சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும்.

நேற்று இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டர் மூலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையுடன் சேர்ந்த அவரது விளையாட்டைப் பற்றிய கதையாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிகிறது.

தற்போது முத்தையா முரளிதரன் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர் என்றும், அவருடைய வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை குறிக்கும் விதமாக #shameonVijaysethupathy என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் முத்தையா முரளிதரனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அசுரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் டீஜேவுக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் இந்தப்படத்தில் தமிழ் ஈழம் குறித்த அரசியல் இருப்பதால் இதில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இவர் அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு மகன் வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தாய் ஒரு தமிழ் ஈழம் இனத்தை சேர்ந்தவர் என்றும் இந்தப் படத்தில் அது சார்ந்த அரசியல் இருப்பதால் இதில் நடிப்பதற்கு தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus