சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

  • October 29, 2022 / 07:03 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அதுல்யா ரவி. முதல் படமே அதுல்யா ரவிக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. அது தான் ‘காதல் கண் கட்டுதே’. இந்த படத்தை ஷிவராஜ் இயக்க, ஹீரோவாக கேஜி நடித்திருந்தார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதுல்யா ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.

 

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைகாய் சிப்ஸ்’ என படங்கள் குவிந்தது. அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது நடிகை அதுல்யா ரவி கைவசம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ என்ற படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus