சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அதுல்யா ரவி. முதல் படமே அதுல்யா ரவிக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. அது தான் ‘காதல் கண் கட்டுதே’. இந்த படத்தை ஷிவராஜ் இயக்க, ஹீரோவாக கேஜி நடித்திருந்தார். ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதுல்யா ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன்’ என படங்கள் குவிந்தது. அதுல்யா ரவி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்போது நடிகை அதுல்யா ரவி நடிப்பில் ‘வட்டம், முருங்கைகாய் சிப்ஸ்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய பெயரில் போலியான ஃபேஸ்புக் அக்கவுண்டை கிரியேட் செய்து எனது நெருங்கிய நண்பர்களுக்கும், திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்களுக்கும் மெசேஜ் அனுப்பி வரும் தவறான செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனக்கென ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
I m not sure why someone created a fake ID in Facebook and messaging to the people I know personally as well as in film industry!This is bullshit !Already reported it !And I wanted to inform you guys that I m not in Facebook officially! https://t.co/k7kX0WD6Qn
Kindly report it pic.twitter.com/nnLWStTruP— Athulyaa Ravi (@AthulyaOfficial) April 23, 2021