ராஜா ராணி , தெறி ,மெர்சல் , பிகில் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ . இவரது படங்கள் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் நல்ல வசூலை இவரது படங்கள் பெறுகின்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். இந்த படம் நல்ல வசூலை பெற்றாலும் ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்றது .
இதனை அடுத்து இயக்குனர் அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார் . அதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வருகிறார் . நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைத்துள்ளனர் .
ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்து சல்மான் கான் அவர்களை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் விஜய் வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் .இந்நிலையில் அட்லீ சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் . அந்த வகையில் தற்போது இவர் ட்விட்டரில் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .
Just like tat pic.twitter.com/5iA2uyO4K8
— atlee (@Atlee_dir) November 7, 2022