லீக்கானது ஷாருக்கான் – அட்லி கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ படத்தின் சண்டைக் காட்சி… ஷாக் மோடில் படக்குழுவினர்!

  • March 10, 2023 / 05:32 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று லீக்காகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus