\தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘சிவாஜி’. தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்க, ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இதில் ரஜினி ‘சிவாஜி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படம் உலக அளவில் ரூ.152 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.
கடந்த ஜூன் 15-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#15YearsOfSivaji’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். இந்நிலையில், இன்று இப்படத்தின் தயாரிப்பாளர் AVM சரவணன் ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
To celebrate #15yearsofSivaji M. Saravanan, M.S. Guhan and Aruna Guhan of AVM Productions met Superstar Rajinikanth this morning.
.#AVMProductions #SuperstarRajinikanth @arunaguhan_ pic.twitter.com/NVNdnigEYW— AVM Productions (@avmproductions) June 17, 2022