சமீபத்தில் வெளிவந்து மலையாளம் மட்டுமல்லாது பிற மொழி ரசிகர்களையும் கவர்ந்த “அய்யப்பனும் கோஷியும்’ திரைப்பட இயக்குனர் சச்சி என்றழைக்கப்படும் சச்சிதானந்தன் நேற்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவராவார்.
கேரள திரையுலகில் வெற்றி பெற்ற பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்திற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அனார்கலி”.
திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு இவர் வழக்கறிஞராக 8 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நேற்று மாரடைப்பு காரணமாக திருஷுரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திவிர சிகிச்சை பிரிவில் இருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது இழப்பு மலையாள திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.