சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

  • July 20, 2022 / 07:02 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் பல தமிழ் படங்கள் குவிந்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இயக்குநர்கள் கெளதம் மேனன் – பிரசாத் முருகேசன் இயக்கிய இந்த வெப் சீரிஸில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். சமீபத்தில், இந்த சீரிஸின் சீசன் 2 ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus