தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.
இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜெட் ஸ்பீடில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘காதல் கண்மணி’யின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் டீசர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. முழுப் பாடலையும் நாளை (டிசம்பர் 10-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
யாக்கை தேடலின் அந்தாதி நீ
…. song from December 10th …#KaadhalKanmani #காதல்கண்மணி #Bachelor @thinkmusicindia@dir_Sathish @Dili_AFF @Axessfilm@divyabarti2801 @gopiprasannaa@k_pooranesh @sanlokesh@Donechannel1 @ctcmediaboy pic.twitter.com/uTLl2sV6Af
— G.V.Prakash Kumar (@gvprakash) December 8, 2020