பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

  • September 25, 2023 / 10:49 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இப்போது இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான், மிஷன் சேப்டர் 1’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வணங்கான்’ படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி முதற்கட்ட படப்பிடிப்பும் நடந்து, பின் சில காரணங்களால் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus