Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • February 17, 2024 / 01:50 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் வலம் வருபவர் அருண் விஜய். இப்போது இவர் நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், பார்டர், வணங்கான்’ என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வணங்கான்’ படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி முதற்கட்ட படப்பிடிப்பும் நடந்து, பின் சில காரணங்களால் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus