விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். தற்போது, மாடல் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அனுப்பிய மெசேஜிற்கு ஸ்டோரி மூலம் “நான் நல்லவன்னு பேரு வாங்க ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள போல. நான் பாலாவா இருந்தா உங்களுக்கு பிடிக்குமான்னு பார்க்க தான் போனேன்.
எனக்கு கிடைச்சது 6 கோடி கப். நான் வெளிப்படையா எனக்கு என்ன தோணுச்சோ அதை பேசினேன். நான் நல்லவனா? கெட்டவனா?-ன்னு எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு. இப்போது அதுக்கு ஒரு விடை கிடைச்சிருச்சு, நான் நல்லவன் தான். அதுவும் நீங்களே சொல்லிட்டீங்க. என்னோட வாழ்க்கை முழுவதும் இது ஒன்னு போதும் எனக்கு” என்று பதில் சொல்லியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.