விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.
தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்கில் “போட்டியாளர்கள் தங்களுக்குள் 1-யிலிருந்து 16-வரை வரிசை படுத்த வேண்டும்.
1-வது நபராக நிற்பவர் ‘பிக் பாஸ்’ சீசன் 4-யின் வெற்றியாளரை குறிக்கும். அதை தொடர்ந்து வரும் வரிசை ஒவ்வொரு வாரத்தின் எவிக்ஷனை குறிக்கும். 16-வதாக நிற்கும் நபர் இந்த வார எவிக்ஷன் பிராஸஸில் வெளியேறுபவராக இருக்கலாம்” என்று சொல்லப்படுகிறது. அங்கு 15-வது நபராக மாடல் பாலாஜி முருகதாஸை நிற்க வைக்க வேண்டுமென அறந்தாங்கி நிஷா, வேல்முருகன், சோமசேகர், அர்ச்சனா ஆகியோர் சொல்கிறார்கள். அதிலும் அர்ச்சனா “பாலா ரொம்ப கோபப்படுகிறான்” என்று சொல்கிறார். இதன் பிறகு பாலாஜி முருகதாஸ் “கோபப்படாமல் இருக்கலாம் முடியாது. கோபப்படுறது மைனஸும் கிடையாது” என்று பேசுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day19 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jYYwJRbmt7
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.