OTTயில் வெளியாகிறதா விஜய் சேதுபதி இயக்குனரின் திரைப்படம்!?

  • September 10, 2020 / 03:00 PM IST

தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்று அந்த இயக்குனர்கள் அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட்டாகிய கதை ஏராளம்.

அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” போன்ற படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் “ஒரு பக்க கதை”.

தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளார்கள். காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் இந்தப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஸ்ரீனிவாசன் இந்த படத்தை தயாரித்துள்ளார் மற்றும் பிரேம்குமார் இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா லாக்டோன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.