விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக் மற்றும் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர்.
தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் பாலாஜி முருகதாஸ் “main-ஆ நான் வந்து ரெண்டு பேர்கிட்ட கண்டிப்பா நான் sorry கேட்கணும். first sorry கேட்க வேண்டியது வந்து ஆரி அண்ணாகிட்ட. ரெண்டாவது வந்து ரியோ பிரதர். ஆனா, கண்டிப்பா எவ்ளோ பார்த்துட்டு வந்திருப்பீங்க life-ல. நான் இனிமேதான் பார்க்கப்போறேன். எனக்கு அந்த அளவுக்கு தகுதி இருக்கான்னு தெரியல. most of the people நம்ம கீழ இருந்து தான் மேல வந்திருப்போம். நம்ம ஒவ்வொருத்தரை கைப்பிடிச்சு தூக்கி விட்டதை தவிர்த்து, இங்க நான் வந்து இழுத்த மாதிரி தோணுச்சு கீழ. i’m sorry ரெண்டு பேர்கிட்டயும்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#Day75 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/e8HgP2lS6a
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020