தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ்வின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் விஜயவாடா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு விமான நிலையத்துக்கு என்.டி.ஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா சென்று ரஜினியை வரவேற்றபோது எடுத்த வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.